மாவட்டம் பற்றி
தோற்றம்
திருப்பத்தூர் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும். திருப்பத்தூர் மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி திருப்பத்தூரில் துவக்கி வைத்தார்.
நிர்வாக அலகுகள்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு கோட்டங்களையும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 208 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிகளும், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய மூன்று பேரூராட்சிகளும் உள்ளன.
அமைவிடம்
தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடக எல்லையோர நகரங்களுடன் சாலை வழி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தடம் 4 ( திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் – சென்னை ), 46 ( பெங்களூரு – சென்னை ).
கனிமங்கள் மற்றும் சுரங்கம்
கனிம வளம் நிறைந்த மாவட்டம், செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.
தொழில்கள்
திருப்பத்தூர் தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன.