Close

திட்டங்கள்

திட்ட வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

அம்மா உடற்பயிற்சி கூடம்

 துறை: கிராமப்புற வளர்ச்சி   தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள் ஊரக பகுதி இளைஞர்கள்…

வெளியிடப்பட்ட தேதி: 11/07/2020
விவரங்களை பார்க்க

அம்மா பூங்கா

துறை: கிராமப்புற வளர்ச்சி   ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள் அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு…

வெளியிடப்பட்ட தேதி: 11/07/2020
விவரங்களை பார்க்க

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஊரக பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அலகு தொகை – ரூ.2.10 இலட்சம் ஒரு வீட்டிற்கு – ரூ.1.80…

வெளியிடப்பட்ட தேதி: 11/07/2020
விவரங்களை பார்க்க

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய் திட்டம்)

குக்கிராமங்களில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கண்டறியப்படும் அடிப்படைத் தேவைகளை தாய் திட்ட நிதியிலிருந்தும், இதர திட்டங்கள் மற்றும் இதர துறை திட்டங்கள் மூலமும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும் மேற்கொள்ளப்படும் பணிகள் குக்கிராமம் குறித்த அடிப்படை வசதிகளின் விவரங்களான குடிநீர் விநியோகம் (மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறுமின்விசை பம்புகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், கைப்பம்புகள்), தெருவிளக்குகள், தெருக்கள் மற்றும் சந்துகள், இடுகாடு / சுடுகாடு> அரசு / உள்ளாட்சி கட்டடங்கள்> அரசு / உள்ளாட்சி பள்ளி கட்டடங்கள்> சிறுகுளங்கள் மற்றும் ஊரணிகள்>…

வெளியிடப்பட்ட தேதி: 11/07/2020
விவரங்களை பார்க்க