பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இடஒதுக்கீடு
கல்வி மற்றும் மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய கீழ்கண்டவாறு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வகுப்பு | விழுக்காடு % |
---|---|
பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம்கள் நீங்கலாக) | 26.5 விழுக்காடு |
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் | 3.5 விழுக்காடு |
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் | 20 விழுக்காடு |
ஆதிதிராவிடா் | 18 விழுக்காடு |
பழங்குடியினா் | 1 விழுக்காடு |
மொத்தம் | 69 விழுக்காடு |
விடுதிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீரமரபினா் மற்றும் சிறுபான்மையினா் வகுப்பினைச் சார்ந்த ஏழை மாணவ, மாணவியர் அனைத்து வசதிகளுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகாமையில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கீழ்கண்டவாறு 33 பள்ளி விடுதிகளும் மற்றும் 12 கல்லூரி விடுதிகளுமாக மொத்தம் 45 விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில் 2705 மாணவ, மாணவிகள் தங்கி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வ. எண் | விடுதியின் விவரம் | பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் | மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் | சிறுபான்மையினர் நல விடுதிகள் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1. | பள்ளி மாணவர் விடுதி | 9 | 12 | 0 | 21 |
2. | பள்ளி மாணவியர் விடுதி | 6 | 6 | 0 | 12 |
3. | கல்லூரி மாணவர் விடுதி | 4 | 1 | 1 | 6 |
4. | கல்லூரி மாணவியர் விடுதி | 2 | 2 | 2 | 6 |
மொத்தம் | 21 | 21 | 3 | 45 |
இவற்றில் 41 விடுதிகள் சொந்தக் கட்டடத்திலும் 4 விடுதிகள் வாடகை கட்டடத்திலும் இயங்கி வருகின்றன.
பள்ளி / கல்லூரி விடுதி மாணவ / மாணவியா்களுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- பள்ளி விடுதிகளில் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ / மாணவியர்களுக்கு ஆண்டிற்கு நான்கு செட் சீருடைகள்
- செலவினமின்றி உணவு மற்றும் தங்குமிடம்
- 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள்.
- விடுதி மாணவ / மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை / ஜமுக்காளம்
- நூலகம் மற்றும் விளையாட்டு சாதனங்கள்.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
- சோப்பு, பற்பசை, எண்ணெய் முதலிய
செலவினங்களுக்காக மாதந்தோறும் செலவினம் வழங்கப்படுகிறது.
- வாரத்திற்கு ஐந்து நாட்கள் முட்டையும் வாரத்தில் ஒரு நாள் சிக்கன் / மட்டன் வழங்கப்படுகிறது.
- ஆண்டுதோறும் 3 கட்டங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்குள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் வேலை பெறுவதற்கான தகுதிபடுத்திக்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்வழிகாட்டி நிகழ்ச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடத்தப்படுகிறது.
- ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு ஆங்கிலம் மற்றும் இரண்டு தமிழ் நாளிழ்கள் வழங்கப்படுகின்றன.
விடுதிகளில் சேர தேவையான தகுதிகள்
- பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பிலிருந்து 12-ம் வரையிலான பள்ளி மாணவ / மாணவியா்களும், கல்லூரி விடுதிகளில் பட்டயம், பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மாணவ / மாணவியா்களும் சோ்த்துக் கொள்ளப்படுவா்.
- இவ்விடுதிகளில் சோ்வதற்கான படிவங்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா் / காப்பாளினிகளிடமும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கி.மீ-க்கு அப்பால் இருக்க வேண்டும். (மாணவியருக்கு தூரவிதி பொருந்தாது.)
உணவு மான்யம் பெறும் தனியார் விடுதி
- திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதி ஒன்று வாலாஜாபேட்டையில் தீனபந்து ஆசிரமம் எனும் பெயரில் செயல்பட்டுவருகிறது.
- தனியார் விடுதியில் தங்கி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ / மாணவியருக்கு உணவுக் கட்டணமாக மாதமொன்றுக்கு ரூ.650/- அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை (Scholarship Scheme)
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட / மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவிகளின் நலனுக்காக கீழ்கண்ட உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
- பள்ளிப்படிப்பு உதவித்தொகை
- பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை
- மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்
- பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்
- தொழிற்கல்வி படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்
பள்ளிப்படிப்பு உதவித்தொகை (Prematric Scholarship)
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் ஆங்கில வழிக் கல்வி கற்பிப்புக் கட்டணமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200/-ம், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.250/-ம் திரும்ப அளிக்கப்படுகிறது.
பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை (Postmatric Scholarship)
பள்ளி மாணவ / மாணவியர்களுக்கான உதவித்தொகை (ஆங்கில வழி கற்பிப்புக்கட்டணம் திரும்பபெறுதல்)
அதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆங்கில வழிக் கற்பிப்புக் கட்டணமாக ரூ.500/- திரும்ப அளிக்கப்படுகிறது.
கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முழுநேர மற்றும் இரண்டாவது முறை மாற்றம் (Second Shift) மாலை நேர வகுப்புகளில் பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ / மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ / மாணவியர்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழில் கல்லூரிகள் மற்றும் சுயநிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ / மாணவியர்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற தகுதிகள்
- பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாணவ / மாணவியர் கல்வி உதவித்தொகை பெற அவர்தம் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
- கல்வி உதவித்தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் நேரடியாக மாணவ, மாணவியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
- பட்டப்படிப்பு, தொழிற்கல்வி படிப்பு, இலவச கல்வி திட்டங்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்தல் வேண்டும்.
- மேலும் விவரங்களுக்கு மாணவ / மாணவியர் அவர்தம் பயிலும் கல்வி நிறுவனங்களை தொடர்புகொள்ளலாம்.
கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் (Rural Girls Incentive)
- கிராமப்புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் கல்வியை இடைநிற்றல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
- 3 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500/-ம், 6 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ரூ.1,000/-ம் வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தில் பயன்பெற பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விலையில்லா மதிவண்டிகள் வழங்குதல்
- அரசு பள்ளிகள் / அரசு உதவிப்பெறும் பள்ளிகள் / பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மாணவ / மாணவியா்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
- பள்ளி வளாகத்திலேயே அமைந்துள்ள விடுதியில் தங்கி அதே பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியா்கள் மட்டுமே மிதிவண்டிகள் பெற தகுதியில்லை.
விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
- திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தையல் கலை அறிந்த மகளிருக்கு மட்டும் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டுவருகிறது.
- இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்
- திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சலவை தொழில் புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விலையில்லா சலவைப்பெட்டி வழங்கப்பட்டுவருகிறது.
- சலவைத் தொழில் செய்வோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்குதல்
- நிலமற்ற, வீடற்ற ஏழை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலஎடுப்பு செய்யப்பட்டு விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுவருகிறது.
- இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சீர்மரபினர் நல வாரியம் (ம) நரிக்குறவர் நல வாரியம்
இந்நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடிக்கு உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்கான உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் கீழ்கண்டவாறு வழங்கப்படுகின்றன.
இந்நலவாரியத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள்
வ.எண் | உதவி திட்டம் | உதவித் தொகை ( ரூபாயில் ) |
---|---|---|
1 | விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் | |
அ)விபத்தினால் மரணம் ஏற்ப்பட்டால் உதவித் தொகை | 1,00,000/- | |
ஆ)விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப | 10,000/- முதல் 1,00,000/- வரை |
|
2 | இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை | 15,000/- |
3 | ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை | 2,000/- |
4 | கல்வி உதவித்தொகை | |
அ) பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1,000/- | |
ஆ) பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு | 1,000/- | |
இ)11 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1,000/- | |
ஈ)12 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு | 1,500/- | |
உ)12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவருக்கு | 1,500/- | |
ஊ)முறையான பட்டப்படிப்பிற்கு | 1,500/- | |
மாணவா் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு | 1,750/- | |
எ)முறையான பட்ட மேற்படிப்புக்கு | 4,000/- | |
மாணவா் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு | 5,000/- | |
ஏ)தொழிற்கல்வி பட்டப்படிப்பிற்கு | 4,000/- | |
மாணவா் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்பிற்கு | 6,000/- | |
ஐ)தொழிற்கல்வி பட்டமேற்படிப்பிற்கு | 6,000/- | |
மாணவா் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்பிற்கு | 8,000/- | |
ஒ)ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு | 1,000/- | |
மாணவா் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி | 1,200/- | |
5 | திருமண உதவித்தொகை | 2,000/- |
6 | மகப்பேறு உதவித் தொகை | |
அ)மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000- வீதம் 6 மாதங்களுக்கு | 6,000/- | |
ஆ)கருச்சிதைவு, கருக்கலைப்பு | 3,000/- | |
7 | மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடுசெய்தல் | 500/- வரை |
8 | முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் | 1,000/- |
9 | சுய தொழில் தொடங்க மானியம் ( நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மட்டும் ) | |
அ) தனிநபா் மானியம் | 10,000/- | |
ஆ) குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்க மானியம் | 1,25,000/- |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டும் கடன் திட்டங்கள் (TABCEDCO)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக – பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.
நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள்
- சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்
- விவசாயம்
- போக்குவரத்து
- கைவினைஞர் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள்
- இளம் தொழிற்பட்டதாரிகள் சுயதொழில்
- தொழிற்கல்வி பயிலுதல்
தகுதிகள்
i) பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும்.
ii) குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.98,000/-க்கும், நகர்ப்புறங்களில் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
iii) பயனடைவோரின் வயதுவரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
iv) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகள் அமைப்பதற்காக, அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் 2007-2008 ஆம் ஆண்டு முதல் இக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000/- வரை அரசால் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையினர் நலம்
தமிழக அரசு சிறுபான்மையின மக்களின் சமூக, கல்வி பொருளாதார நிலைகளை மேம்படுத்திடவும், பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திடவும் இச்சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திடவும் தனியே சிறுபான்மையினர் நல இயக்ககம் உருவாக்கப்பட்டு இந்திய ஆட்சிப்பணி நிலையில் உள்ள அலுவலரை துறைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது.
கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
அரசு / அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மதவழி சிறுபான்மையினர்களான கிருத்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமுதாயத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மூன்று வகையான மைய அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வ. எண் | கல்வி தகுதி | உதவித்தொகை |
---|---|---|
1. | 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை | பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை |
2. | 11 முதல் பி.எச்.டி படிப்பு வரை | பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை |
3. | தொழிற்கல்வி (ம) தொழிற்நுட்பகல்வி | தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை |
இத்திட்டங்களின் கீழ் ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவை மைய அரசால் நேரடியாக சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியர்களின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிமாற்றம் (ECS) மூலம் செலுத்தப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான பொதுவான நிபந்தனைகள்
- தமிழ்நாட்டில் பிறப்பிடமாகக் கொண்டு இந்திய நாட்டின் வேறு மாநிலத்தில் படித்தாலும் அவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- தொடர்புடைய கல்வி உதவித்தொகை திட்டங்களின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
- ஒரு குடும்பத்தை சார்ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- அஞ்சல்வழி மூலம் பயில்பவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.
- மைய அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்களின்கீழ் கல்வி உதவித்தொகை பெறுபவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை / பிற துறைகள் / நல வாரியங்கள் ஆகியவற்றில் கல்வி உதவித்தொகைக்கென விண்ணப்பித்திருந்தாலும் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற இயலும்.
- தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வியில் முதல் பட்டதாரி சலுகை (கற்பிப்புக் கட்டணம்) பெற்றுள்ள மாணவ / மாணவியர் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறை
மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை இணையவழியில் (Online) www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை படியிறக்கம் செய்து கீழ்கண்ட ஆவணங்களுடன் கல்வி நிலையத்தில் உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- நிழற்படம்,
- கைபேசி எண்
- இமெயில் (மின்னஞ்சல் முகவரி)
- ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்
- சாதி/மதம் சான்றிதழ் (அ) ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் சுய உறுதிமொழி
- வருமானச் சான்று (அ) (அ) ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் சுய உறுதிமொழி
- இருப்பிட / உறைவிடச் சான்று
- ஆதார் எண்
- கல்வி கட்டண ரசீது
- செயல்நிலையில் உள்ள வங்கிக்கணக்கு விவரம் (Account number with IFS Code)
கல்வி நிலையங்கள மேற்கொள்ள வேண்டிய பணிகள்
முதல்வர் / தலைமையாசிரியர்கள் தத்தம் கல்வி நிலையத்தின் பெயர் www.scholarships.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், பதிவு செய்வதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
கல்வி நிலையத்தின் முதல்வர், மாணவ / மாணவியரால் இணையவழி (Online) மூலம் பதிவு செய்த விண்ணப்பங்களை அனைத்து இணைப்புகளுடன் பெற்று விண்ணப்பங்கள் தகுதிகளின்படி உள்ளதை கூர்ந்தாய்வு செய்து, இணைய வழியாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும்.
மேலும் கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) அசல் விண்ணப்பங்களுடன் அனைத்து ஆவணங்களையும் கல்வி நிலையங்களின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் வைத்திருத்தல் வேண்டும். இவை மைய மாநில அரசுகளின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
வேலுர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுர்கானாக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினாகள், பிலால்கள், முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வாரியத்தின் மூலமாக கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாரியத்தில் உறுப்பினராக தேவையான தகுதிகள்
உறுப்பினர் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
பதிவு பெற்ற உறுப்பினருக்கு ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும்.
உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் இவ்வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறப்படின் வேறு வாரியங்களிலிருந்து இதே நலத்திட்ட உதவிகள் பெற இயலாது.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு, வேலுர் மாவட்டத்தில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கமானது செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் திரட்டப்படும் நன்கொடைகளுக்கு ஒருமடங்கு இணை மான்யம் என்பதை 01.04.2012 முதல் அரசு இருமடங்கு இணை மான்யத்தொகையாக உயர்த்தி வழங்குகிறது. அதிகபட்சம் இணை மான்யமாக ரூ.20.00 இலட்சம் அரசால் வழங்கப்படுகிறது.
இந்த நிதி தொகுப்பிலிருந்து வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்வகையில் உதவிகள் மற்றும் தேவைக்கேற்ப தையல், பூ வேலைப்பாடுகள் மற்றும் காலணிகள் செய்வது, கைவினைப் பொருள்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் சிறு தொழில் துவங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ பிரிவினரும் புனிதப் பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு ஆண்டிலும் 500 கிறித்துவர்கள் புனித பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இதற்கென அரசின் நிதி உதவியாக நபர் ஒருவருக்கு ரூ.20,000/- வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
- ஜெருசலேம் பயணக் குழுவினரால் பயண நிரல் இறுதி செய்து பயண முகவர்கள் மூலம் புனித பயணம் மேற்கொள்ளப்படும்.
கிறித்துவ தேவாலயங்களை புனரமைப்பு செய்தல்
சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தேவாலயம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயங்களில் மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட குழுவின் ஸ்தல ஆய்வுக்குப்பின் கட்டட வரைபடம், கட்டடத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் வயது, பழுதுகள் மதிப்பீடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நிதியுதவி குறித்து பரிந்துரை செய்யப்படுகிறது.
டாம்கோ நிறுவனம் மூலம் சிறுபான்மையினர் தொழில் துவங்க கடனுதவி வழங்கும் திட்டம்
சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த மக்கள் அதிகளவில் சுயதொழில் மேற்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்காக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 1999-ல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
டாம்கோ கழகத்தின் மூலம்
தனிநபர் கடன்,
சுயஉதவிக்குழுக்கடன்
கல்விக்கடன்
போன்ற கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தகுதிகள்
- பயனாளி சிறுபான்மையினர் வகுப்பினராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.98,000/-க்கும், நகர்ப்புறங்களில் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பயனடைவோரின் வயதுவரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் கடன் விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
மாவட்ட அளவில் | பொதுத்தகவல் அலுவலர் | மேல்முறையீட்டு அதிகாரி |
---|---|---|
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் | மாவட்ட வருவாய் அலுவலர் |