Close

ஏலகிரி

வகை மற்றவைகள்

திருப்பத்தூரில் 30 கி.மீ தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ தூரத்திலும், பெங்கலூரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும், ஏலகிரி மலை உள்ளது. ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் அமைந்துள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ ஆகும். இயற்கைப்பூங்கா, முருகன் ஆலயம், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் ஆலயம், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்.

புகைப்பட தொகுப்பு

  • ஏலகிரி மலை - ஏரி
  • ஏலகிரி மலை - ஏரி
  • ஏலகிரி மலை- பூங்கா

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வேலூர் 224 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொடர்வண்டி வழியாக

ஜோலார்பேட்டை சந்திப்பு திருப்பத்தூரில் அமைத்துள்ள முக்கிய இரயில் சந்திப்பாகும் (28 கி.மீ. ) மற்றும் திருப்பத்தூர் இரயில் நிலையம் திருப்பத்தூரில் அமைத்துள்ளது

சாலை வழியாக

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடக எல்லையோர நகரங்களுடன் சாலை வழி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தடம் 4 ( வாணியம்பாடி- சென்னை ), 46 ( பெங்களூரு – சென்னை ) மற்றும் 234 ( மங்களூரு – விழுப்புரம் ) ஆகியவை வேலூர் வழியே செல்கின்றன.