Close

இலக்கியம் படைப்போம் வாரீர்!

 

திருப்பத்தூர் மாவட்டத்தின் அன்பிற்குரிய இலக்கிய நேயர்களுக்கு வணக்கம்

நூல்களை வாசிக்க வாசிக்க தொட்டணைத்து ஊறும் மணற்கேணியாய் அறிவு பெருகி, அன்பு பெருகி சமூகம் மேலும் மேலும் மேம்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் தன்னகத்தே பல விழுமியங்களை வளர்த்துக் கொள்ள நூல் வாசிப்பு உதவுகிறது.

தொடர் வாசிப்பின் வழியே சிந்தனை வளம் பெருகி புதியன படைக்கும் ஆற்றல் ஒரு சிலருக்குள் ஊற்றெடுக்கும். அத்தகைய படைப்பு ஆர்வத்தைக் கிடப்பில் போட்டு காலங்காலமாகப் பூட்டி வைத்து வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நபரா நீங்கள்?

படைப்பாளராகத் துடிக்கும் புதியவர்களுக்கான சிறப்புமிக்க ஒரு அரிய வாய்ப்பை நமது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வழங்கவிருக்கிறது. படைப்பார்வம் மிக்கோரை இலக்கியம் படைப்போம் வாரீர்! என அன்போடு அழைக்கிறது.

தமிழில், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய 3 பிரிவுகளில் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 20 சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து அவற்றைப் புத்தகமாக அச்சிட்டு வருகிற 2025 பிப்ரவரி மாதத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்திவிருக்கும் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தி விதிமுறைகள், உறுதிமொழி மற்றும் சரிபார்ப்புப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இலக்கியப் படைப்புகளை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி உரிய காலத்தில் சமர்ப்பித்து தங்களின் படைப்புகளின் வழியே இம்மாவட்டத்தின் இலக்கியப் படைப்பாளிகளின் வட்டத்திற்குள் தங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் இன்புற்றிருக்க தொடர்ந்து வாசியுங்கள். இந்த மண்ணையும், மக்களையும், பல்லுயிர்களையும் நேசியுங்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர்,
திருப்பத்தூர் மாவட்டம்.

விதிமுறைகள்

உறுதிமொழி & சரிபார்ப்புப் படிவம்